நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களத்திலும், இரசிகர்களைக் கவர்ந்திழுக்கும் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான 'அமரன்' திரைப்படம், சிவகார்த்திகேயனை வசூல் நாயகனாக மாற்றியுள்ளது.
சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிக்கும் திரைப்படத்திற்கு ‘பராசக்தி’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
இத் திரைப்படத்தின் Title வீடியோவை திரைப்படக்குழு நேற்று வெளியிட்ட நிலையில் தற்பொழுது இத்திரைப்படத்தின் புதிய போஸ்டரை திரைப்படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்த் தீ பரவட்டும் என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது.