ஆனால் இவை மட்டுமல்ல, விதைகளும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் உணவில் ஆளி விதைகளை சேர்ப்பது பல நன்மைகளைத் தரும்.
ஆளி விதைகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, செரிமானத்தையும் ஊக்குவிக்கிறது.
ஆளி விதைகள் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது இரத்த நாளங்களில் ஏற்படும் வீக்கத்தை கட்டுப்படுத்துகின்றது. மேலும் ஆய்வுகளின்படி ஆளி விதைகளை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள நல்ல Cholesterol இன் அளவுகள் மேம்படும்.
ஆளி விதைகளில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து மலச்சிக்கல் போன்ற வயிறு சார்ந்த பிரச்சினைகளை தடுக்க உதவுகிறது.
காய்கறி மற்றும் பழங்களுடன் ஒப்பிடுகையில், ஆளி விதைகளில் அதிக அளவு Antioxidant உள்ளது. தினமும் ஒரு தேக்கரண்டி ஆளி விதைகளைச் சாப்பிட்டு வந்தால் சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் அதிக அளவு ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் காணப்படுகின்றன.