அறிமுக இயக்குநர் பாலாஜி கேசன் இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்துள்ள திரைப்படம் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’. இந்தத் திரைப்படத்தில் அவந்திகா நாயகியாக நடித்துள்ளதுடன் நிவாஸ் கே. பிரசன்னா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மேலும் இத்திரைப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, அழகம்பெருமாள், பகவதி பெருமாள், விஜய் வரதராஜ், படவா கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரொமான்ஸ் அதிகமான ஒரு இளைஞனின் காதல், அதனால் ஏற்படும் பிரச்சினைகள், அவனுக்கு உதவும் குடும்பம், நண்பர்கள் என, அசத்தலான ரொமான்ஸ் நகைச்சுவையாக , இன்றைய இளைஞர்களைக் கவரும் வகையில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்தநிலையில் இத்திரைப்படம் OTT தளத்தில் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.