மருதாணி பழங்காலத்திலிருந்தே இயற்கையான தலைமுடிக்கான சாயமாக பயன்படுத்தப்படுகிறது.
இளநரை மறையவும் கருமையாக இருக்கவும் இவை ஏனைய பொருட்களுடன் இணைந்து கூந்தலுக்கு முக்கியமானதாகவும், முதன்மையானதாகவும் பயன்படுத்தப்படுகின்றது.
செவ்வரத்தம் பூவிதழுடன் மருதாணி இலைகச் சேர்த்து நன்றாக பேஸ்ட் போன்று அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.பின்பு கூந்தலை நன்றாக நனைத்து இந்த பேஸ்டை கூந்தலில் தடவி 10 நிமிடத்திற்குப் பின்னர் கழுவ வேண்டும்.
நெல்லிக்காயுடன் சிறிதளவு கறிவேப்பிலை, இதனுடன் மருதாணி இலைகளைச் சேர்த்து நன்றாக அரைத்து கூந்தலில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து கூந்தலைக் கழுவ வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் கரிசலாங்கண்ணி,நெல்லி,மற்றும் மருதாணி இலைகள் என்பவற்றை நன்றாக பேஸ்ட் போன்று அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.பின்பு கூந்தலை நனைத்து இந்த பேஸ்டை தடவி 10 நிமிடத்திற்குப் பின்னர் கழுவ வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் அளவான தண்ணீர் எடுத்து,மருதாணி இலை மற்றும் தேயிலை சேர்த்து நன்றாக வேக விட வேண்டும்.பின்பு வடிகட்டியதும் அந்த நீரில் கூந்தலைக் கழுவி வரலாம்.
கூந்தலுக்கு மருதாணி என்பது, விலைமதிப்பற்ற இயற்கை தந்த பொருள்.இதை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் மென்மையான கருமையான கூந்தலைப் பெறலாம்.