தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் 'விடாமுயற்சி' திரைப்படம் இம்மாதம் 6 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் நடிகர் அஜித்குமாருடன் இணைந்து த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
சமீபத்தில் விடாமுயற்சி திரைப்படத்தின் Trailer மற்றும் பாடல்கள் வெளியாகி இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.
தற்போது 'விடாமுயற்சி' திரைப்படத்தின் Pre Booking வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது.
அந்தவகையில், இதுவரை உலகம் முழுவதும் இந்திய மதிப்பில் ரூ.15 கோடி வசூலித்துள்ளதாகவும் மேலும் தமிழகத்தில் மட்டும் இந்திய மதிப்பில் ரூ.7 கோடி வசூலித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.