சீனாவின் DeepSeek ஐ (Deepseek) அமெரிக்க நாடாளுமன்றம் தனது அலுவலகத்தில் பயன்படுத்தத் தடை விதித்துள்ளது.
அனைத்து ஊழியர்களும் தொலைபேசிகள், கணினிகள் மற்றும் டெப்லெட்டுகளில் DeepSeek ஐ install செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கணினியில் ஆபத்தான மென்பொருளைப் பதிவேற்ற பல செட்போட்கள் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. Deepseek தற்போது விசாரணையில் உள்ளது.
செட்போட்களின் உதவியுடன், Malware (மோசமான மென்பொருள்) கணினியில் பயன்படுத்தப்படலாம்.
இது மேலும் இணைய சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்று அஞ்சப்படுகிறது.
அதே நேரத்தில், இத்தாலி, அயர்லாந்து போன்ற நாடுகளும் Deepseek-ற்கு தடை விதித்துள்ளன.
மேலும் சில நாடுகள் தடைவிதிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.