மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், 2013ஆம் ஆண்டு பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான "கீதாஞ்சலி" திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து ரஜினிமுருகன், ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், மாமன்னன், சைரன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான 'நடிகையர் திலகம்' திரைப்படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்ததற்காக கீர்த்தி சுரேஷிற்கு தேசிய விருது கிடைத்தது.
இந்நிலையில், இவர் நடிக்கும் புதிய Web Seriesற்கு 'அக்கா' என்று பெயரிடப்பட்டுள்ளது. குறித்த Web Seriesஇன் First Look Teaser வெளியாகியுள்ளது. தர்மராஜ் ஷெட்டி எழுதி இயக்கியுள்ள இந்த Web Seriesஇல் ராதிகா ஆப்தே, ஆதித்யா சோப்ரா, யோகேந்திர மோக்ரே மற்றும் அக்சயே விதானி, தன்வி ஆஸ்மி ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
"அக்கா" Web Seriesஇன் Teaser வெளியாகி இரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த Teaser இல் கீர்த்தி சுரேஷ் மிரட்டலான வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.