பொதுவாக பூக்கள் என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும். எல்லோருக்கும் பிடித்த அழகான பூக்களில் பல மருத்துவக் குணங்களும் உள்ளன. அந்தவகையில் ஆவாரம் பூவின் நன்மைகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
சித்த மருத்துவத்தில் தலையோங்கிக் காணப்படும் இந்த ஆவாரம் பூ மனிதனின் உடலில் உள்ள நோய்களைக் குணப்படுத்தும் வரப்பிரசாதமாக உள்ளது. ஆவாரை முழுத் தாவரமும், துவர்ப்புக் குணமும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. சிறுநீரகம் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்தும்.
ஆவாரம் பூ மிக முக்கியமாக சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தக்கூடியது. குறிப்பாக சர்க்கரை இரத்தத்தில் கலந்து இருந்தாலும், அவற்றை இரண்டே நாட்களில் சரி செய்யும் வல்லமை கொண்டது. உடல்சூடு, தோல் வறட்சி நீங்கிப் பலம் பெற ஆவாரம் பூவை அரைத்து சாறாகவும் குடிக்கலாம் அல்லது சமைத்தும் உட்கொள்ள முடியும்.