2025 Champions கிண்ணத் தொடரில் பும்ரா மட்டும் முழு உடல் தகுதியைப் பெறாமல், விளையாடவில்லை என்றால் இந்தியா வெற்றி பெறும் வாய்ப்பு முப்பது சதவீதம் குறைந்துவிடும் என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் - "பும்ரா மீதான எதிர்பார்ப்பு நிறையவே உள்ளது.
பலரும் பும்ரா திடீரென்று களத்திற்கு வந்து பந்து வீச்சில் கலக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் காயத்திலிருந்து கொண்டு பந்து வீச்சில் சிறப்பாக செயற்படுவது என்பது மிகவும் கடினமானது.
பும்ரா மட்டும் முழு உடற்தகுதியுடன் இருந்தால் அவர் இறுதிக்கட்ட ஓவர்களில் சிறப்பாக பந்துவீசுவார். இது இந்தியாவுக்கு சிறப்பாக அமையும்.
டெத் ஓவரில் பும்ரா பந்து வீசும் போது அது ஒட்டுமொத்தமான முடிவையும் மாற்றும்" என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.