Android Smart Phoneகளில் பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்க Google தொடர்ந்து பணியாற்றி வருகிறது.
அதன் புதிய வசதியாக 'அடையாள சோதனை' என்ற யுக்தி கொண்டு வரப்பட்டுள்ளது.
Smart Phoneகள் திருடப்படும் பட்சத்தில் அதில் இருக்கும் தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாக்க இந்த வகையிலான Biometrics கொண்டு வரப்பட்டுள்ளது.
"தவறான நபர்களின் கைகளில் கிடைக்கப்பெற்ற Smart Phones மூலம் அதன் உரிமையாளர்களின் தகவல்களைப் பயன்படுத்தி மோசடி வேலையில் ஈடுபட முடியும்" என Google இன் வலைப்பதிவு குறிப்பிட்டுள்ளது.
Android 15 கொண்டு இயங்கும் Smart Phonesகளில் இந்த வசதி மேம்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் Smart Phoneனின் கடவுச்சொல் தெரிந்தாலும் கூட, அதனைத் திருடியவர்களால் தகவல்களைப் பெற முடியாது எனக் கூறப்படுகிறது.
இதில் Biometrics முறையை, பயனாளிகள் முற்றிலும் முடித்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அம்சம், 3-ஆம் கட்ட Biometrics கொண்ட Smart Phone களில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
புகைப்படம், மாஸ்க், போலியான கைரேகைகள் மூலமாகக் கூட இந்த 3-ஆம் கட்ட Biometrics இருக்கும் Smart Phoneகளை Unlock செய்ய முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Biometrics இல்லாமல் Phoneஐ திருடியவர்களால் அதன் Pin ஐ மாற்ற முடியாது.
மேலும், “Find My Device” அம்சத்தையும் off செய்து வைக்க முடியாது.