சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா ஆகியோரின் நடிப்பில் உருவாகி வருகிறது 'பராசக்தி' திரைப்படம்.
ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போரில் காவல்துறையின் துப்பாக்கிக் குண்டுகளுக்குத் தன்னுயிரை இழந்த அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்த மாணவனான ராஜேந்திரனின் வாழ்க்கை வரலாறுதான் இந்தத் திரைப்படத்தின் கதைக்களம் என்று சொல்லப்படுகிறது. இதேவேளை இந்தத் திரைப்படத்தைப் பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருவதுடன், நேற்று தொடங்கிய இத்திரைப்படத்தின் பணிகள் 5 நாட்கள் நடைபெறும் என்று கூறப்படுகிறது. அதில் சிவகார்த்திகேயன் மற்றும் அதர்வா ஆகியோரின் காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.