விஷால் - சுந்தர்.சி கூட்டணியில் 'ஆம்பள', 'மதகஜராஜா' ஆகிய திரைப்படங்கள் வெளியாகி இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப்பெற்றன.
இதில் 'ஆம்பள' திரைப்படம் நகைச்சுவையில் நல்ல வரவேற்புப் பெற்றது. அதேபோல் 12 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான 'மதகஜராஜா' திரைப்படம் வசூல் ரீதியில் வெற்றி அடைந்தது.
'மதகஜராஜா' திரைப்படம் தமிழகத்தில் மட்டும் இந்திய மதிப்பில் 51 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்தநிலையில் சுந்தர்.சி மற்றும் விஷால் ஆகியோர் மீண்டும் ஒரு திரைப்படத்திற்காக இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.