கூனைப் பூவில் நார்ச்சத்து, உடலுக்கு தேவையான விற்றமின்கள், கனிமங்கள் மற்றும் Anti oxidants அதிகமாக நிறைந்துள்ளன.
கூனைப் பூ சாப்பிடுவது வயிற்று செரிமானத்தை எளிதாக்கி மலச்சிக்கலைத் தடுக்கிறது. அத்துடன் குடல் நலனுக்கு உகந்தது.
இந்தப் பூவில் உள்ள பொற்றாசியம், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி இதய நோய் வரும் அபாயத்தைக் குறைக்கிறது. மேலும், இரத்தநாளங்களைப் பாதுகாத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது.
இதில் நிறைந்து காணப்படும் விற்றமின் C, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்த் தொற்றுக்களில் இருந்துபாதுகாக்கின்றன.
கூனைப் பூவில் நார்ச்சத்து அதிக அளவில் இருப்பதால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்க உதவுகிறது. இது உடல்எடையைக் குறைப்பவர்களுக்கு சிறந்த உணவாக அமைகிறது. புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் திறன்கொண்ட அற்புதமான பூ ஆகும்.
எனவே இவ்வாறான பலவிதமான ஆரோக்கியத்தைத் தரும் கூனைப்பூவை நமது சமையலில் சேர்த்து உட்கொண்டு, நமதுஆரோக்கியத்தினை பலப்படுத்திக்கொள்வோம்.