நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், நடன இயக்குநர் என பன்முகத் திறமைகளைக் காட்டி வருபவர் ராகவா லோரன்ஸ். ஒரு நடன இயக்குநராகத்தான் திரைத்துறையில் தனது பயணத்தை ஆரம்பித்தார். பின்பு நடிகராக, இயக்குநராக தனது திறமையை வெளிப்படுத்த ஆரம்பித்தார்.
ராகவா லோரன்ஸ் நடித்து, இயக்கி 2011 இல் வெளிவந்து மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ' காஞ்சனா ' இதன் தொடர்ச்சியாக 2015 இல் 'காஞ்சனா 2' மற்றும் 2019 இல் 'காஞ்சனா 3' என அடுத்தடுத்த பாகங்களை ராகவா லோரன்ஸ் இயக்கியிருந்தார்.
இப்பொழுது ராகவா லோரன்ஸ் இயக்கத்தில் 'காஞ்சனா 4' உருவாகவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. இத்திரைப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே மற்றும் பொலிவுட் நடிகை நோரா பதேகியும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
இத்திரைப்படம் இந்திய மதிப்பில் ரூ.90 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த ஜனவரி 23 ஆம் திகதி ஆரம்பித்த இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் தற்போது பொள்ளாச்சிப் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Pan India படமாக உருவாகும் இப்படத்தை, August மாதம் வெளியிட திரைப்படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் இத்திரைப்படம் பற்றிய மேலதிக தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.