தும்மல் இயற்கையாக ஏற்படும் ஒரு நிகழ்வு. பொதுவாக, அடிக்கடி ஏற்படும் தும்மலும், இருமலும் , சளியும், ஒவ்வாமை மற்றும் ஜலதோஷத்தின் ஆரம்பகட்ட அறிகுறிகளே.
சில வைரஸ் கிருமிகள், உங்களுடைய மூக்கின் உட்பகுதியிலோ அல்லது தொண்டையின் உட்பகுதியிலோ சென்று தாக்கத்தை செலுத்துவதனால் தும்மல், இருமல் மற்றும் சளி ஏற்படுகின்றது.
தும்மல் ஏற்படுவதற்கு பல காரணங்கள் பெரும்பாலும் நம்மைச் சுற்றியே இருக்கின்றன. அதிக வேகத்தில் தும்மினால் காது சவ்வில் பிரச்சினைகள் ஏற்படும். மிகச் சிறிய இரத்தக் குழாய்கள் பாதிக்கப்படலாம். அத்துடன் நுரையீரலிலுள்ள காற்றுப்பைகள் பாதிப்படையலாம்.
அதிக தடவை தும்மல், தொண்டையில் பிரச்சினை , காய்ச்சல், மூக்கில் நீர் தொடர்ச்சியாக வடிதல் என்பன காணப்பட்டால் வைத்தியரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.
அடிக்கடி கைகளைக் கழுவுங்கள். அலர்ஜியை உண்டாக்கக்கூடிய பொருட்களைப் பயன்படுத்தாதீர்கள். முகக்கவசம் அணிந்துகொள்ளுங்கள். புகை, தூசி, மாசு அதிகமுள்ள இடங்களைத் தவிர்த்து விடுங்கள்.
குளிர் மற்றும் காய்ச்சல் காரணமாக ஏற்படும் தும்மலைச் சரி செய்ய தேன் உதவுகிறது. அதேபோல் தும்மலுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மற்றொரு வழி, சூடான நீரில் ஆவி பிடிப்பது. இவ்வாறு நீராவி பிடிப்பதினால் ஒரு வாரத்திற்குள் இந்த நோயிலிருந்து விடுபடலாம்.
Orange மற்றும் எலுமிச்சை போன்ற பழங்களை உண்பதால் காலப்போக்கில் தும்மலைக் குறைக்கலாம். ஏனெனில், அதில் Flavonoids என்ற இரசாயனம் அதிகம் உள்ளது.