தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் தனுஷ் 'பவர் பாண்டி' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியிருந்தார். இதன் பின் இவர் இயக்கத்தில் அடுத்ததாகக் கடந்த வருடம் வெளியான 'ராயன்' திரைப்படம் இரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியடைந்தது.
அந்த வெற்றிக்குப் பிறகு நடிகர் தனுஷ் தனது மூன்றாவது திரைப்படமாக 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் இவரது சகோதரியின் மகன் பவிஷ் என்பவர் கதாநாயகனாகவும், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வோரியர், மெத்யூ தோமஸ், வெங்கடேஷ் மேனன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தனுஷின் 'Wonder Bar Films' நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் Trailer இன்று வெளியான நிலையில், இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா எதிர்வரும் February மாதம் 11 ஆம் திகதி சென்னையில் இடம்பெறவுள்ளதாக அதிகாரபூர்வத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விழாவில் நடிகர் தனுஷ் கட்டாயமாகக் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.