உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை உணவு முறைகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. அந்த உணவினை மேலும் சுவையூட்ட பல்வேறு மசாலாக்களைப் பயன்படுத்துகிறோம். அதில் ஊட்டச்சத்து நிறைந்த மசாலாக்களில் ஒன்றாக கிராம்பு அமைகிறது.
கிராம்பில் பலவித மருத்துவக் குணங்கள் உள்ளன. நீண்ட காலமாக பாரம்பரிய மருத்துவத்தில் வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் முக்கிய மூலிகைகளில் ஒன்றாக கிராம்பு அமைகிறது. கிராம்புப் பொடியை வறுத்து 1/2 கிராம் அளவு தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும்.
கிராம்பில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்புத் தன்மை சளி, இருமல் பிரச்சினைகளை குணப்படுத்துகின்றது. உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் வெறும் Tea குடிக்காமல் கிராம்பு கலந்து குடிக்கலாம்.மேலும் கிராம்பு Tea மன அழுத்தத்தைக் குறைக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.