நம்மில் பலரும் நாள் முழுவதும் Smart Phone ஐ பயன்படுத்திவிட்டு, இரவு நேரங்களில் Smart Phone ஐ Charge போட்டுவிட்டு நித்திரைக்குச் சென்று விடுகிறோம்.
இரவு நாம் நித்திரைக்குச் செல்வதிலிருந்து காலை கண் விழித்து Chargeலிருந்து Phone ஐ துண்டிக்கும்வரை Battery தனது 100 சதவீத கொள்ளளவை எட்டினாலும், இரவு முழுவதும் Phone Charge இல் இருந்திருக்கும்.
நமது Phone முழுவதுமாக Switch Off ஆகும்வரை, நீங்கள் அதனைப் பயன்படுத்தினால், உங்களது Phone இன் Battery பாதிக்கப்படுவதோடு, அதன் செயற்திறனும் குறையும் என்ற உண்மை பலருக்கும் புரிவதில்லை.
மேலும், உங்களது Phone ஐ Charge செய்த பின்னர், அது தனது 100 சதவீத கொள்ளளவை எட்டிய பின்பும் பல மணி நேரம் Phone ஐ Charge இல் விட்டுவிடுவது கட்டாயமாக அதன் செயற்திறனை பாதிக்கும்.
எப்போதும் தேவைக்கு அதிகமான நேரம் Phone ஐ Charge இல் வைத்திருப்பதை தவிர்ப்பது நல்லது. மேலும், நாம் பயன்படுத்தும் Phoneஇன் Batteryயானது 100 சதவீத Charge ஐ அடைந்தவுடன், அதனை Charge இலிருந்து எடுத்துவிடுவதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
தேவைக்கு அதிகமாக நீங்கள் phone ஐ எவ்வளவு Charge இல் விடுகிறீர்களோ, அந்த அளவிற்கு அதன் செயற்திறன் குறையும்.
எனவே இரவு முழுவதும் போனை Charge செய்வதை முடிந்த அளவு தவிர்த்துக்கொள்வது சிறந்ததாகும்.