ஒவ்வொரு நாளும் Electric வாகனங்களின் பாவனை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் புதிய வாகனங்களை பல நிறுவனங்கள் உற்பத்தி செய்து வருகின்றன.
Simple Energy-இன் புதிய Simple One Gen 1.5 Electric Scooter இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு மின்சார வாகன உற்பத்தியாளரான Simple Energy அதன் Simple One மின்சார Scooter இன் Gen 1.5 மொடலை அறிமுகப்படுத்தியுள்ளது.
Simple One Gen 1.5-இன் ஆரம்ப விலை இந்திய மதிப்பில் ரூ.1.66 இலட்சம் ஆகும்.
மேம்படுத்தப்பட்ட இந்த Electric Scooter ஒருமுறை முழுமையாக Charge செய்யப்பட்டால் 248 Km ஓடும் என்று நிறுவனம் கூறுகிறது. இது முந்தைய தலைமுறை மொடலை (212 Km வரம்பு) விட அதிகமாகும்.
உலகளவில் மின்சார வாகனங்கள் பிரபலமடைந்து வருவதால் , இந்த Electric Scooter வாடிக்கையாளர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.