என்றென்றும் இளமையாக இருக்க வேண்டும் என்பது அனைவரதும் ஆசை. சிலர் தோல் சுருங்கி முதுமை தெரியக்கூடாது எனவும் உடல் வலிமை குறைந்துவிடக்கூடாது எனவும் பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகிறார்கள்.
நாம் வயதாகும் போது ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு நம்மை வழிநடத்திக் கொள்வது மிக மிக முக்கியமாகும்.
தினசரி உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி செய்பவர்கள் இதய நோயில் இருந்து பாதுகாக்கப்படுகிறார்கள்.உடற்பயிற்சி செய்வதால் மூட்டுவலி குறைவது மட்டுமல்லாது மன ஆரோக்கியமும் சீராக இருக்கும்.
தினசரி காலையில் 5 அல்லது 6 பாதாம் தொடர்ந்து சாப்பிடுங்கள். இது உடலுக்கு விட்டமின் E மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு வழங்க உதவி செய்யும்.
கொகோவில் ஏராளமான சத்துக்கள் இருப்பதால், அதில் Antioxidants நிறைந்துள்ளன. இது சருமத்தை ஈரப்பதமாக்க உதவுகிறது மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும்.
இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன், 5 துளிகள் ஆளிவிதை எண்ணெயை எடுத்து, அதைக்கொண்டு முகத்தை மசாஜ் செய்யவும். இது சருமத்தை மென்மையாக வைத்திருக்கும்.