உலகின் நான்காவது பெரிய சமூக வலைத்தளமாகக் காணப்படும் Instagram அடிக்கடி புதிய அம்சங்களை அறிமுகம் செய்துவருகிறது.
Instagram இன் Comment பகுதியில் Dislike Option ஒன்றை தற்போது அறிமுகப்படுத்தவுள்ளது.
Post மற்றும் Reelsகளில் இடம்பெறும் Comment பகுதியில் பயனர்கள் பயன்படுத்தும் விதமாக Dislike Option எனும் ஒரு புதிய அம்சத்தை பரிசோதித்து வருவதாக Instagram அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
Instagram நீண்ட காலமாக Dislike Optionனை பரிசோதித்து வருவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், அண்மையில் Instagram இன் தலைவரின் Threads பதிவில், இந்த அம்சம் பயனர்களின் உரையாடல்களின் ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.
விரைவில் இந்தப் புதிய அம்சம் அனைவரது பயன்பாட்டுக்கும் வருமென எதிர்பார்க்கப்படுகிறது.