கடந்த ஆண்டு 54 நாடுகளில் அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட 296 இணைய முடக்க சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
2024ஆம் ஆண்டில் அதிகளவிலான இணைய முடக்கம் மியான்மார், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா உட்பட 11 நாடுகளில் 103ற்கும் மேற்பட்ட மோதல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களினால் அதிகளவு இணைய முடக்கம் இடம்பெற்றுள்ளது .
35 நாடுகளில் 71 க்கும் மேற்பட்ட இணைய தளங்களுக்கான அணுகல் தடைசெய்யப்பட்டுள்ளது.
இலோன் மஸ்க்குக்குச் சொந்தமான சமூக ஊடகத் தளமான X, 2024 இல் உலகம் முழுவதும் மிகவும் தடுக்கப்பட்ட தளமாக (14 நாடுகளில் 24 முறை தடுக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து TikTok 10 முறை ஒன்பது நாடுகளில் தடுக்கப்பட்டுள்ளது.