அஜித்தின் நடிப்பில் சமீபத்தில் 'விடாமுயற்சி' திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'
இந்தத் திரைப்படத்தில் அஜித்குமார் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏப்ரல் 10 ஆம் திகதி இத்திரைப்படம் வெளிவரும் என திரைப்படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இத்திரைப்படத்தில் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இத்திரைப்படத்தின் டீசர், இம்மாதம் 28 ஆம் திகதி வெளியாகும் என திரைப்படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
இது கண்டிப்பாக அஜித் இரசிகர்களுக்கு சிறப்பான விருந்தாக அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.