ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படம் "கூலி".
அனிருத் இசையமைக்கும் இந்தத் திரைப்படத்தில் சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜோன் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிக்கின்றனர்.
இதேவேளை 'கூலி' திரைப்படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்தத் திரைப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை இத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.