2025 Champions கிண்ணத் தொடரில் நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா தசைப்பிடிப்பு காரணமாக விளையாடுவது சந்தேகம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ரோஹித் தற்போது பயிற்சியில் ஈடுபடாமல் இருக்கிறார். நியூசிலாந்து அணிக்கு எதிரான அடுத்த போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ளது.
அதற்கு முன் ரோஹித் சர்மாவால் முழு உடல் தகுதியைப் பெற முடியாது என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டியில் சுப்மன் கில் அணியை வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.