நீரிழிவு நோய்க்கும் இது சிறந்த மருந்தாகவுள்ளது. மலச்சிக்கலைக் குணப்படுத்தும் ஆற்றல் இந்தக் கீரைக்கு உண்டு. முள்ளங்கிக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை பலப்படும். விற்றமின் பற்றாக்குறைகளும் நீங்கும்.
முள்ளங்கிக் கீரையில் புரோட்டீன், சுண்ணாம்புச் சத்து மற்றும் இரும்புச் சத்துக்களும் இதில்அடங்கியுள்ளன. முள்ளங்கிக்கீரையை, சமைக்காமல் மெல்லிய துண்டுகளாக்கி பச்சையாக Salad போலவும் சாப்பிடலாம்.
இது சிறுநீர் கல்லடைப்பு, கரப்பான் என்ற தோல் வியாதிகளையும் குணமாக்கும். ஒரு கைப்பிடி அளவு முள்ளங்கிக் கீரையில் அரை ஸ்பூன் உப்புச் சேர்த்து வேகவைத்து, தொடர்ந்து மூன்று நாட்கள் காலை, மாலை உண்டு வர நீர் அடைப்புத் தொல்லை தீரும்.
பொதுவாக காலை உணவில் இந்த முள்ளங்கிக் கீரையை Soup செய்து குடித்து வந்தால் இந்தக் கீரையில் உள்ள நார்ச்சத்து குடலின் இயக்கத்தை மேம்படுத்துகின்றது
ஏராளமான ஆரோக்கியம் நிறைந்த இந்த முள்ளங்கிக் கீரையை உட்கொண்டு பலனைப்பெறுங்கள்.