அந்த வகையில் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் Google நிறுவனத்தின் பல்வேறு சேவை மற்றும் தயாரிப்புகளைப் பயன்படுத்துகின்றனர்.
இதனால் Google நிறுவனம் இந்தியாவில் பெரும் தொகையை முதலீடு செய்து வருகிறது.
அந்த வகையில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் தனது புதிய மற்றும் மிகப்பெரிய இந்திய அலுவலகத்தை Google நிறுவனம் திறந்து வைத்தது.
பெங்களூரின் மகாதேவபுரா பகுதியில் அனந்தா என்ற பெயரில் இந்த புதிய Google அலுவலகம் அமைத்துள்ளது.
10 இலட்சத்து 60 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், 5,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் வகையில் இந்த அலுவலகம் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது.
Google இன் Android, தேடல், பணம் செலுத்துதல்,Cloud, Maps மற்றும் Deep Mind உள்ளிட்ட பல்வேறு குழுக்களாக பணி புரியும் ஊழியர்களுக்காக தனித்தனி பிரிவுகள் இந்த புதிய அலுவலகத்திலிருந்து செயல்படவுள்ளது.
Google நிறுவனம் கடந்த ஆண்டு முதல் இந்தியாவில் தனது Smart Phoneகளின் உற்பத்தியைத் தொடங்கியது.
மும்பை, ஹைதராபாத் , புனே, குர்கான் ஆகிய நகரங்களிலும் Google அலுவலகம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.