பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி இரசிகர்களின் கலவையான விமர்சனங்களைப்பெற்றது. இந்த நிலையில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் 'குட் பேட் அக்லி' திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத்திரைப்படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ளதுடன் இத்திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் பின்னணி இசையை மேற்கொள்கிறார்.
இதேவேளை இத்திரைப்படத்தின் Teser இன்று மாலை 7.03 க்கு வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
மேலும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தனது எக்ஸ் தளத்தில் Teser வெளியீடு குறித்து பதிவொன்றுமிட்டுள்ளார்.