ஹிந்தித் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் அமிதாப் பச்சன் சமீபத்தில் தமிழில் வெளியான 'வேட்டையன்' திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் நடித்திருந்தார்.
அது மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் திரைக்கு வந்த 'கல்கி 2898' திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் கலக்கியிருந்தார்.
இந்த வயதிலும் இவர் இளம் நடிகர்களுடன் போட்டிபோட்டு நடித்து வருகிறார்.
82 வயதாகும் அமிதாப் பச்சனுக்கு சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் குணமடைந்தார்.
இந்த நிலையில், தனது X தளப்பக்கத்தில் ஒரு பதிவையிட்டு அதில், ‘ செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது ‘ என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் பதிவைப் பார்த்த இரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின் இதற்கு அமிதாப் பச்சன் ஒரு விளக்கத்தையும் கொடுத்திருந்தார். அதில் ‘ நான் படப்பிடிப்புக்குச் செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதுதான் அந்தப் பதிவிற்கு அர்த்தம்'' என்று கூறியிருந்தார்.
இந்தப் பதிவையடுத்து அவருடைய இரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.