கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உலக செஸ் சம்பியன் பட்டத்தை கைப்பற்றிய சென்னையைச் சேர்ந்த 18 வயதான குகேஷ் (2,787) 10 புள்ளிகள் அதிகரித்து 2 இடம் முன்னேற்றம் கண்டு 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இது அவரது சிறந்த தரநிலையாகும். சென்னையைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா (2,758) 8-ஆவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார்.
அவர் கடந்த ஆண்டு ஜூலை மாதத்துக்குப் பின்னர் முதல்-10 இடங்களுக்குள் வருவது இதுவே முதல் முறையாகும்.
வீராங்கனைகள் தரவரிசையில் இந்தியாவின் கோனேரு ஹம்பி (2,528) 6-வது இடத்திலும், ஆர்.வைஷாலி (2,484) 14-வது இடத்திலும், ஹரிகா (2,483) 16-வது இடத்திலும் உள்ளனர்.