அவுஸ்திரேலிய அணியோடு அரையிறுதிப் போட்டியில் மோதுவதற்கு தங்கள் அணி வீரர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருப்பதாக இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் - "ஏதேனும் போட்டிகளில் நாம் தவறு செய்யலாம்.
அந்தத் தவறை எப்படித் திருத்துவது என்பதுதான் முக்கியம். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி ஒரு நல்ல ஆட்டமாக இருக்கும் என நினைக்கின்றேன்.
அவுஸ்திரேலியா icc போன்ற தொடர்களில் சிறப்பாக விளையாடக்கூடிய அணி. எங்களைப் பொறுத்தவரை செய்ய வேண்டிய விடயத்தை சரியாகச் செய்ய வேண்டும். அன்றைய நாளில் என்ன செய்வது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். அதை நாங்கள் எதிர்நோக்கி காத்திருக்கிறோம். அரையிறுதியில் வெற்றி பெறுவோம் எனும் நம்பிக்கை உள்ளது." என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.