Skype 2025 மே மாதம் முதல் செயற்படாது என Microsoft நிறுவனம் அறிவித்துள்ளது.
Skype ஒரு காலத்தில் 300 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டு Digital தகவல் தொடர்பில் முன்னணி வகித்தது.
அண்மைய Microsoft அறிக்கையின்படி, 2023-இல் Skype இன் பயனர்கள் எண்ணிக்கை 36 மில்லியனாகக் குறைந்துள்ளது.
பயனர்களின் எண்ணிக்கை சரிவால், Microsoft நிறுவனம் Skype ஐ மூடிவிட்டு, Microsoft Teams மீது கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது.
இலவச நுகர்வோர் தகவல் தொடர்பு சேவைகளை எளிதாக்கி, வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப விரைவாக மாற, Skype ஐ 2025 மே மாதத்தில் நிறுத்த உள்ளதாக Microsoft அறிவித்துள்ளது.
Microsoft Teams என்ற நவீன தகவல் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பு மையத்தில் கவனம் செலுத்த உள்ளோம் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.
பயனர்கள் தங்கள் Skype கணக்கைப் பயன்படுத்தி இலகுவாக Microsoft Teams இல் உள்நுழையலாம் என Microsoft நிறுவனம் அறிவித்துள்ளது.