நீண்ட இடைவேளைக்குப் பிறகு இயக்குநர் சுந்தர் சி மற்றும் நகைச்சுவை நடிகர் வடிவேலு ஆகியோர் 'கேங்கர்ஸ்' என்ற திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.
சுந்தர் சி மற்றும் வடிவேலு கூட்டணி மிகப்பெரிய success கூட்டணி என்று கொலிவூட் திரையுலகில் கூறப்பட்ட நிலையில், இருவருக்கும் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக பல ஆண்டுகளாக இருவரும் திரைப்படங்களில் இணையாமல் இருந்தனர்.
15 வருடங்களுக்குப் பிறகு இணையும் சுந்தர் சி மற்றும் வடிவேலு நகைச்சுவைக் கூட்டணி இரசிகர்கள் இரசிக்கும் வகையில் இருக்கும் என்றும் "கைப்புள்ள", "வீரபாகு" மாதிரி "சிங்காரம்" என்ற கதாபாத்திரத்தில் 'கேங்கர்ஸ்' திரைப்படத்தில் வடிவேலு நடித்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் 'கேங்கர்ஸ்' திரைப்படம் ஏப்ரல் 24 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.