புனித மூலிகைகளில் ஒன்று துளசி. இதில் உள்ள மருத்துவ குணங்களும் ஏராளம். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் இருந்து சருமப் பிரச்சினைகளைத் தீர்ப்பது வரை பல நன்மைகளை வழங்குகிறது.
துளசி இலையைச் சாப்பிட்டு வருவதன் மூலம் வாய்த் துர்நாற்றம் நீங்கும். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையை இட்டு ஊறவைத்த நீரைத் தொடர்ந்து பருகி வந்தால் நீரிழிவு நோய் நம்மை நெருங்காது. தலை வலிக்கு துளசி மிகவும் சிறப்பான நிவாரணி. அதற்கு துளசியை அரைத்து அதில் சந்தனத் தூளைச் சேர்த்து கலந்து நெற்றியில் பூசி வந்தால் நல்ல நிவாரணம் கிடைப்பதோடு உடல் சூடும் குறையும்.
தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் துளசி இலையைச் சாப்பிட்டு வந்தால் அவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி இதய நோய் வரும் அபாயத்தைக் குறைக்கும். மேலும் மன அழுத்தம் என்பது தற்போது அதிகம் உள்ளது. எனவே மன அழுத்தம் நீங்கத் துளசி இலையைத் தினமும் சாப்பிட்டு வாருங்கள். இதில் உள்ள Adaptogen மன அழுத்தத்தைக் குறைக்கும்.