இரத்தச் சிவப்பணுக்கள் மற்றும் வெள்ளை இரத்த அணுக்களை அதிகப்படுத்துவதிலும், பலப்படுத்துவதிலும் இந்தக் கணவாய் மீன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
கணவாய் மீன் என்றாலே கொழுப்பு மீன் என்று கூறுவார்கள். இதிலுள்ள கொழுப்பு இதய ஆபத்தைத் தடுக்கிறது. மேலும், தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவுகிறது.
கணவாய் மீனில் உள்ள செலினியம் மற்றும் விற்றமின் E ஆகியவை நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகின்றன. இது உடலை நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
அதிகளவு புரதம் கொண்ட கணவாய் மீன், தசை வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. உடற்பயிற்சி செய்பவர்கள் மற்றும் தசை வலிமையை அதிகரிக்க விரும்புபவர்களுக்கு இது சிறந்த உணவுத் தேர்வாகும்.
கணவாய் மீன் ஒரு சுவையான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த கடல் உணவாகும். இது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. எனவே இந்தக் கணவாய் மீனை உட்கொண்டு ஆரோக்கியத்தினைப் பலப்படுத்திக்கொள்வோம்.