செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்கின்றன. அந்தவகையில் தற்பொழுது Googleளும் இந்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் இணைந்துள்ளது.
Google தற்போது தனது பயனாளர்களுக்கு Ask For Me என்ற புதிய செயற்கை நுண்ணறிவு வசதியை உருவாக்கியுள்ளது.
இந்தப் புதிய அம்சத்தின் மூலம் பயனாளர்கள், தங்கள் பகுதியில் உள்ள வணிக நிறுவனத்தில் உள்ள பொருட்கள் குறித்தும், சேவைகள் குறித்தும் இலகுவாக அறிய முடியும்.
தெளிவாகக் கூறவேண்டுமானால், உங்களுக்கு ஏதாவது ஒரு கடையில் பொருளோ, சேவையோ தேவைப்படுகிறது என்றால், அதற்காக நீங்கள் அந்தக் கடைக்கு நேரடியாக Phone செய்து விசாரிக்கத் தேவையில்லை.
மாற்றாக, Google அதனுடைய A.I தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி உங்களுக்காக அந்தக் கடைக்கு Phone செய்து விபரங்களைக் கேட்டு உங்களுக்குத் தரும்.
இந்தப் புதிய வசதியினை தற்பொழுது சோதனை அடிப்படையில் சில பயனர்களுக்கு மட்டும் Google வழங்கி வருகிறது.
விரைவில் அனைத்துப் பயனர்களுக்கும் இந்தச் சேவை வழங்கப்பட உள்ளது என Google தெரிவித்துள்ளது.