‘தமிழ்ப் படம்’, ‘விக்ரம் வேதா’, ‘இறுதிச்சுற்று’, ‘ஜகமே தந்திரம்’ உள்ளிட்ட திரைப்படங்களைத் தயாரித்த சசிகாந்த் ‘டெஸ்ட்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.
இந்தத் திரைப்படத்தில் நயன்தாரா, சித்தார்த், மாதவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்துக்கு சக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைக்கிறார். இதேவேளை கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் 'டெஸ்ட்' திரைப்படம் OTT தளத்தில் எதிர்வரும் ஏப்ரல் 4 ஆம் திகதி வெளியாக உள்ளது.
மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பே நிறைவடைந்த நிலையில் தற்போது Post Production பணிகள் நடைபெற்று வருகின்றன.