ஆரம்பத்தில் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துவந்த இயக்குநர் வெங்கட் பிரபு "சென்னை 600028" திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாகி பல நல்ல திரைப்படங்களை இயக்கி இரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.
இவர் இயக்கத்தில் வெளிவந்த 'சென்னை 600028 ' திரைப்படம் கிரிக்கெட், காதல், நகைச்சுவை என உருவாகியிருந்தது. இந்தத் திரைப்படத்தில், சிவா கதாநாயகனாக நடிக்க, விஜயலட்சுமி கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் ஜெய், பிரேம்ஜி அமரன், விஜய் வசந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இதேவேளை 'சென்னை 600028 ' திரைப்படத்தின் முதல், இரண்டாம் பாகத்தைத் தொடர்ந்து, தற்போது இத்திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்க இயக்குநர் வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.