தொடர்ச்சியாக அதிக நேரம் Headphones, Earphones அணிந்து வேலை செய்வதால், நம் காதுகளின் கேட்கும் திறன் குறைய ஆரம்பிக்கிறது என்று அண்மைய ஆய்வுகள் மூலமாக தெரியவந்துள்ளது.
முதலில், நுண்ணிய ஒலிகளைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியாமல் போகிறது. இதைத் தொடர்ந்து, நாளுக்கு நாள் கேட்கும் திறன் மந்தமடைகிறது.
இதன் பாதிப்பு மெதுவாக உருவாவதால், பலரும் தங்களது கேட்கும் திறன் பாதிக்கப்பட்டு விட்டதை உணரவே முடியாது.
ஒரு நாளில் அதிகபட்சமாக இரண்டு மணி நேரத்திற்கு மட்டுமே Earphones பயன்படுத்த வேண்டும். தொடர்ச்சியாகப் பயன்படுத்தாமல், இடைவெளி விட்டுப் பயன்படுத்த வேண்டும்.
அதிக சப்தத்துடன் பாடல்கள் கேட்பது, பேசுவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். உயர் தரத்திலான, அதிநவீன Earphoneகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கூடவே, காதுகளின் பாதிப்பும் அதிகரிக்கிறது.
அதனால், முடிந்த வரைக்கும் Earphones , Headphones ஆகியவற்றை பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.