இரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் தளபதி விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' திரைப்படம் அடுத்த வருடம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குநர் H.வினோத் இயக்கத்தில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்க பிரம்மாண்டத் திரைப்படமாகத் தயாராகி வருகிறது.
இத்திரைப்படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்த பிரபல ஹிந்தி நடிகரான பொபி டியோல் பேட்டி ஒன்றில் விஜய்யைப் பற்றி கருத்துத் தெரிவித்துள்ளார்.
அந்தப் பேட்டியில் அவர், "விஜய் மிகவும் மென்மையான குணம் கொண்டவர். எப்போதும் படப்பிடிப்புத் தளத்தில் எளிமையாகவும் தன்னடக்கத்துடனும் நடந்து கொள்வார். அவருடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது." என்று தெரிவித்துள்ளார்.
விஜய்யின் அரசியல் பிரவேசத்தினால் 'ஜனநாயகன்' திரைப்படமே அவரது இறுதித் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.