2004 ஆம் ஆண்டு இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் ரவி மோகன், அசின் ,நதியா, பிரகாஷ் ராஜ் மற்றும் விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியானது M.குமரன் Son Of Mahalakshmi திரைப்படம். இத்திரைப்படம் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்று வெற்றித் திரைப்படமாக அமைந்தது.
இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையமைப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட்டானது. கணவனைப் பிரிந்து மகனை வளர்க்கும் தாயின் அன்பு, அவள் படும் கஷ்டங்கள், தாய்க்காக மகன் செய்யும் செயல்கள் என மிகவும் நேர்த்தியாக இத்திரைப்படத்தின் கதைக்களம் உருவாகியிருக்கும்.
இந்நிலையில் M.குமரன் Son Of Mahalakshmi திரைப்படம் வெளியாகி 20 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தை மீண்டும் இம்மாதம் 14 ஆம் திகதி Re-Release செய்கின்றனர். ஆகவே, இத்திரைப்படத்தின் Re-Release Trailer ஐ திரைப்படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது.