ஆயுர்வேத மருத்துவத்தில் நெல்லிக்காய் அமுதமாகக் கருதப்படுகிறது.
ஊட்டச்சத்து நிறைந்த இந்தப் பழத்தில் Vitamin C அதிகம் உள்ளது.
இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்.
நெல்லிக்காயில் உள்ள Antioxidant புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும்.
மேலும் சில ஆய்வுகளில் நெல்லிக்காய் சாப்பிடுவதால், புற்றுநோய் செல்களின் வளர்ச்சி தடைப்படும் என்று தெரியவந்துள்ளது.
அத்துடன் வைரஸ் மூலம் பரவும் நோய்களையும் நெல்லிக்காய் கட்டுப்படுத்தும்.
நெல்லிக்காயில் ஒவ்வாமை எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது.
இது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், நாள்பட்ட சுகாதார நிலைகளின் அறிகுறிகளைக் குறைக்கவும் உதவும்.
நெல்லிக்காயை தினசரி உட்கொண்டு வந்தால் மூட்டு வலி மற்றும் வீக்கம் குறையும்.
நெல்லிக்காய் எலும்பை வலுப்படுத்தும் உணவாகும்.
இது உங்கள் எலும்பின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.
மேலும், நெல்லிக்காய் நம் மனம் மற்றும் உடலை அமைதிப்படுத்தும்.
அதிலும் நெல்லிப் பொடியைத் தேனுடன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
நெல்லிக்காய் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும்.
எனவே, நீரிழிவு நோயாளிகள் 1 தேக்கரண்டி நெல்லிக்காய் சாற்றுடன் சிறிது பாகற்காய் சாற்றினைச் சேர்த்து கலந்து குடித்து வருவது நல்லது.
இது உடலில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும்.