'நாடோடிகள்' மற்றும் 'மார்க் ஆண்டனி' ஆகிய திரைப்படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை அபிநயா. அண்மையில் மலையாளத்தில் வெளியாகிய 'பணி' என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் நடிகை அபிநயா தனது திருமணம் குறித்த செய்தியை வெளியிட்டுள்ளார். இதன்படி விரைவில் தனது நீண்ட நாள் காதலனை திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் தற்போது நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும் நடிகை அபிநயா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
எனினும் தனது காதலரைப் பற்றிய விபரங்களை அவர் வெளியிடவில்லை.
இதனையடுத்து நடிகை அபிநயாவின் இரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.