இது உலகளவில் ஆயிரக்கணக்கான பயனர்களைப் பாதித்துள்ளது.
இலங்கை , இந்தியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உட்பட பல நாடுகளில் இந்தப் பிரச்சினை பதிவாகியுள்ளது.
இந்தியாவில் மாத்திரம் , சுமார் 2,300 பயனர்கள் முறைப்பாடு அளித்துள்ளனர்.
குறிப்பாக தேடல் பட்டியின் உள்ளடக்கம் செயற்படவில்லை.
குறித்த செயலிழப்பு பிற்பகல் 3:40 மணியளவில் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவில் 21,000 க்கும் மேற்பட்ட பயனர்கள் புகாரளித்துள்ளனர்.
அதே நேரத்தில் இங்கிலாந்தில் 10,800 க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்ட பயனர்களின் உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஏனெனில் X தளத்தின் செயலிழப்பு அறிக்கைகள் பயனர் சமர்ப்பிப்புகளை அடிப்படையாகக் கொண்டவை என்று சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இடையூறுக்கான காரணம் குறித்து X இன்னும் அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.
கருத்துக்கான கோரிக்கைக்கு நிறுவனம் உடனடியாக பதிலளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இப்போதைக்கு, இந்தப் பிரச்சினை எப்போது தீர்க்கப்படும் என்பதற்கான அதிகாரபூர்வ கால அவகாசம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.