டெஸ்ட் கிரிக்கெட்டின் 150 வருட கால நிறைவினைக் கொண்டாடும் விதமாக, விஷேட பகலிரவு டெஸ்ட் போட்டியொன்று அவுஸ்திரேலிய – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையே ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் மைதானத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்த டெஸ்ட் போட்டி 2027ஆம் ஆண்டின் மார்ச் மாதம் 11 தொடக்கம் 15 வரையிலான காலப்பகுதியில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1877ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்ற பின்னர் டெஸ்ட் கிரிக்கெட் இன்னும் இரண்டு வருடங்களில் 150 வருட பூர்த்தியினை எட்டவிருக்கின்றது.
ஏற்கனவே இங்கிலாந்து – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் டெஸ்ட் கிரிக்கெட்டின் 100 வருட பூர்த்தியினைக் கொண்டாடும் விதமாக 1977ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியொன்று ஒழுங்கு செய்யப்பட்ட நிலையில் குறிப்பிட்ட நிகழ்வின் தொடர்ச்சியாகவே அவுஸ்திரேலிய – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி 150 வருட நிறைவினையொட்டி 2027ஆம் ஆண்டு ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது.