அதுமட்டுமல்லாமல் இவற்றில் இருக்கும் பல ஆரோக்கிய நன்மைகள் பற்றி உங்களுக்குத் தெரியாத விடயங்கள் அதிகம் உள்ளன. அவற்றைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பனை மரங்களின் சில பழங்கள் சிறிய தேங்காய்களைப் போல தோற்றமளிக்கின்றன. அத்துடன் இவை கோகிடோஸ் என்று அழைக்கப்படுகின்றன.
இந்த பனம் பழங்களில் தாதுக்கள் மற்றும் விட்டமின்கள் நிறைந்துள்ளன. இதில் விட்டமின் B மற்றும் C, இரும்பு, கல்சியம், பொற்றாசியம் ஆகியவை நிறைந்துள்ளன.
பனம்பழம் ஒரு இயற்கையான குளிரூட்டியாகும். இது கோடை காலத்தில் ஏற்படும் சோர்வைத் தடுக்க உதவும்.
பனங்காய் சாற்றை நாளொன்றுக்கு இரண்டு முறை அருந்துவதன் மூலம் அதிக உடல் உஷ்ணத்தைத் தணிக்கலாம்.
வயிறு தொடர்பான நோய்களைக் குணப்படுத்தவும், அந்த நோய்களுக்கு சிகிச்சையளிக்கவும், பனம்பழங்கள் பேருதவி புரிகின்றன.சர்க்கரை நோயாளிகளும் இந்தப் பழத்தைச் சாப்பிடலாம்.