இயக்குநர் சஷிகாந்த் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள திரைப்படம் 'Test '. இந்தத் திரைப்படத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர்.
''Test ' திரைப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இதில் சித்தார்த் கிரிக்கெட் வீரராகவும், மாதவன் பயிற்றுவிப்பாளராகவும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
"Test " திரைப்படம் நேரடியாக ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளது. முன்னதாக வெளியிடப்பட்ட 'Test ' திரைப்படத்தின் Teaser இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், இத்திரைப்படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோக்களை திரைப்படக்குழு வெளியிட்டு வருகிறது. நயன்தாரா, குமுதா என்ற கதாபாத்திரத்தில் மாதவனின் மனைவியாக நடித்துள்ளார்.