மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை மமிதா பைஜு. 'பிரேமலு' திரைப்படத்தின் மூலம் இரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த மமிதா பைஜுவுக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
அதன்படி, மமிதா பைஜு தமிழ் சினிமாவில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக 'ரெபல்' திரைப்படத்தில் அறிமுகமானார். தற்போது விஜயின் 'ஜன நாயகன்' திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
தென் இந்தியத் திரையுலகில் மளமளவென முன்னேறி வரும் மமிதா பைஜு தற்போது மீண்டும் ஒரு தமிழ்த் திரைப்படத்தில் நடிக்கிறார். அதன்படி, 'முண்டாசுப்பட்டி' மற்றும் 'ராட்சசன்' திரைப்பட இயக்குநர் ராம் குமார் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்கிறார். "இரண்டு வானம்" எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கிறார்.
கடந்த 15 ஆம் திகதி இந்தத் திரைப்படத்தின் First Look வெளியாகி இருந்தநிலையில், நேற்றைய தினம் திரைப்படத்தின் Second Look ஐ திரைப்படக்குழு வெளியிட்டுள்ளது.