Kolkata Knight Riders அணியானது 2025ஆம் ஆண்டின் பருவத்திற்கான IPL தொடரில் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான சேட்டன் சக்காரியாவினை இணைத்துள்ளது.
சேட்டன் சக்காரியா வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக்கின் பிரதியீட்டு வீரராக Kolkata Knight Rider அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
IPL தொடரின் நடப்புச் சம்பியன்களாக காணப்படும் கொல்கத்தா அணியானது உம்ரான் மாலிக்கினை இந்திய மதிப்பில் 75 இலட்ச ரூபாய்களுக்கு ஒப்பந்தம் செய்திருந்தது.
இந்த நிலையில் உம்ரான் மாலிக் உபாதை காரணமாக இந்தப் பருவத்திற்கான IPL தொடரிலிருந்து விலகுகின்றார்.
இதன் காரணமாக 27 வயது நிரம்பிய சேட்டன் சக்காரியா கொல்கத்தா அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.