தமிழ்சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் 'Good Bad Ugly' திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கும் இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் G.V.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.
இரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகியிருக்கும் 'Good Bad Ugly' திரைப்படத்தின் டீசர் கடந்த 28 ஆம் திகதி வெளியாகி இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
நடிகர் அஜித்குமாரை திரையில் கண்டு களிக்கும் எதிர்பார்ப்பில் காத்திருக்கும் இரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில், தமிழகத்தில் மட்டும் 1000 திரையரங்குகளில் 'Good Bad Ugly' திரைப்படம் வெளியாகுமென தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தத் தகவல் அஜித் இரசிகர்களைக் கொண்டாட வைத்துள்ளதோடு திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.